விஜய் - முருகதாஸ் அடுத்த படமான விஜய் 62 படத்தின் இசையமைப்பாளர்
விஜய் மற்றும் முருகதாஸ் இனைந்தாலே அந்தப்படம் வெற்றி என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் துப்பாக்கி மற்றும் கத்தி மாஸ் படமாக அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வசூலிலும் கலக்கியது.
இந்தநிலையில் விஜய், முருகதாஸ் மீண்டும் இனையயுள்ள படமான விஜ்ய் 62 க்கு தற்போது ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பு வந்துள்ளது. இந்த படத்தினை பற்றி சமுக வலைதளங்களில் பல பொய்யான தகவல்கள் வந்த நிலையில், இப்படம் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.
அந்த தகவல் என்னவென்றால் விஜய் 62 படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தானாம். விஜய் ரசிகர்கள் இந்த தகவலை அறிந்தவுடன் மகிழ்ச்சியாகியுள்ளனர்.
